திருக்குறள் விநாடி வினா போட்டி

திருக்குறள் விநாடி வினா போட்டி
மாவட்ட மைய நூலகத்தில் விநாடி வினா போட்டி நடைபெற்றது.
அரியலூர்,டிச.27- அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், திருக்குறள் குறித்து விநாடி வினா போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் திருவுருச் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிவிழா நடைபெற்று வருகிறது.  அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற விநாடி வினா போட்டிக்கு மாவட்ட மைய நூலக அலுவலர் இரா.வேல்முருகன் தலைமை வகித்தார். போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 57 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர். முன்னதாக நூலகர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் நூலகர் ந.செசிராபூ நன்றி கூறினார்போட்டி நடுவர்களாக அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் குணசுந்தரி, மரகதம் ஆகியோர் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சியில், வாசகர்கள்,வாசக வட்ட உறுப்பினர்கள் , நூலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்படுகிறது.
Next Story