இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

X
அரியலூர், டிச.27 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலக வளாகத்தில் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ராமநாதன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர், அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் வரலாறு மற்றும் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, கட்சி மற்றும் பொதுமக்களுக்கு அவர் ஆற்றியப் பணிகள் குறித்தும்,தொழிற்சங்க போராளி கே,டி,கே, தங்கமணியின் 23 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது ஆற்றியப் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் கலியபெருமாள், ஆறுமுகம், மணிவேல், பானுமதி, வனிதா, முருகேசன், முருகேஸ்வரி, மணிவண்ணன், ராஜ்குமார், காத்தராயன், சிவக்குமார், காசிநாதன், ராமசாமி, பொன்னம்மாள், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதே போல் திருமானூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது கட்சி மற்றும் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு 100 ஆண்டு விழா குறித்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கலியபெருமாள் மற்றும் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர்கள் கரும்பாயிரம், மருதமுத்து, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

