கோவை: அண்ணாமலையின் அறிவிப்பு நகைப்புக்குரியது !

கோவை: அண்ணாமலையின் அறிவிப்பு நகைப்புக்குரியது !
செருப்பு போட மாட்டேன் சாட்டையால் அடித்துக் கொள்வேன், என்ற அண்ணாமலையின் அறிவிப்பு நகைப்புக்குரியது என திருமாவளவன் பேட்டி.
கோவை சுந்தராபுரத்தில், திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று கோவை வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவம் வேதனைக்கு உரியது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி அல்ல பாஜக தான் என்பதை காட்டிக் கொள்ள அவர் முயற்சி செய்கிறார். ஆளும் கட்சி மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் எதிர்க்கட்சி தலைவராகி விட முடியும் என்று அவர் நம்புகிறார். இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் அரசியல் கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார், என்பதை காரணம் காட்டி திமுக பொறுப்பேற்க வேண்டும் என கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாய செயல் என்று கூறினார்.
Next Story