தமிழில் ரயில் கால அட்டவணை காஞ்சியில் பயணியர் வலியுறுத்தல்

தமிழில் ரயில் கால அட்டவணை காஞ்சியில் பயணியர் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் கவுன்டர் அருகே ஆங்கிலத்தில் உள்ளதை போல், தமிழிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், 2002ம் ஆண்டு முதல் புதிய ரயில் நிலையம் இயங்கிவருகிறது.இங்கிருந்து தினமும், அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வரை பயணியர் ரயிலும், மும்பை - நாகர்கோவில் இடையே வாராந்திர விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயிலில் பயணித்து வருகின்றனர். பயணியர் ரயிலுக்கு டிக்கெட் வழங்கும் அலுவலகம் அருகே, ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம் குறித்து ரயில்வே கால அட்டவணையும், அதேபோல காஞ்சிபுரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயிலில் செல்ல டிக்கெட் கட்டணம் குறித்த தகவல் பலகையும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதனால், தமிழ் மட்டுமே படிக்க தெரிந்த ரயில் பயணியருக்கு, ரயில் புறப்படும் மற்றும் கிளம்பும் நேரம், எந்தெந்த ஊர்களுக்கு ரயில் செல்கிறது. கட்டண விபரம் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் கவுன்டர் அருகே, ரயில் கால அட்டவணை மற்றும் டிக்கெட் விபரத்தை ஆங்கிலத்தில் உள்ளதை போல், தமிழிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story