ஏடிஎம்-ல் விட்டு சென்ற பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

ஏடிஎம்-ல் விட்டு சென்ற பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
X
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஏடிஎம்-ல் விட்டு சென்ற பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது
இளையான்குடி சாலையூரில் தனியார் ஏடிஎம் மையத்தில் டிச.4-ம் தேதி ரசுலாசமுத் திரத்தைச் சேர்ந்த அஜய் என்பவர் ரூ.10,000 எடுத்தார். ஆனால் பணம் வராததால் அவர் அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் அந்த ஏடிஎம் மையத்துக்கு இளையான்குடி மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் அகமது ஜலால் சென்றார். அப்போது இயந்திரத்தில் ரூ.10,000 இருந்தது. அந்த பணத்தை எடுத்து அகமதுஜலால் இளையான்குடி போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் நேற்று(டிச.26) அஜயின் தாயார் மாரீஸ்வரியிடம் சார்பு-ஆய் வாளர் சிவசுப்பு முன்னிலையில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story