கோவை: முயலைக் கவிச்செல்லும் கருஞ்சிறுத்தை !

கோவை: முயலைக் கவிச்செல்லும் கருஞ்சிறுத்தை !
தடாகம்,பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று நேற்று முன் தினம் முயலை வேட்டையாடி அதை தனது வாயில் கவ்வியபடி செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
கோவை வன சரகத்துக்கு உட்பட்ட தடாகம், கணுவாய் வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை அடிக்கடி பார்க்க முடியவில்லை.அவ்வப்போது வனப்பகுதியில் உள்ள பாறையில் படுத்து ஓய்வு எடுக்கும் வீடியோவும் பரவி வருகிறது. இந்நிலையில் கருஞ்சிறுத்தை ஒன்று நேற்று முன் தினம் முயலை வேட்டையாடி அதை தனது வாயில் கவ்வியபடி செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. வனத்துறையினர் கோவை வன சரகரத்துக்கு உட்பட்ட தடாகம், கணுவாய் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி இருக்கும் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா,என்றும் ஆய்வு செய்து வருகிறனர்.
Next Story