மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

X
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் குறித்து ஆய்வு செய்தால் அதில் ஒரு சில மாணவர்கள் மிக சிறப்பான வேலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் சாதாரணமாக வேலையில் இருக்கிறார்கள். சிறப்பான வேலையில் இருக்கிறவர்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்தால் அந்த மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்து விழிப்புணர்பு பெற்றவர்களாகவே இருந்திருப்பார்கள். எந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் பெறுவதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும். குறைந்த ஊதியத்தில் குறைந்த முயற்சியில் குறைவாக கஷ்டப்பட்டு அதிகமாக இலாபம் கிடைத்தால் அதுவே உங்களுக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு. நீங்கள் எடுக்கக்கூடிய மதிப்பெண்கள் என்பது மிகவும் முக்கியம். ஆனால் மதிப்பெண்களை விட மிகவும் முக்கியமானது விழிப்புணர்வு ஆகும். ஒவ்வொரு வருடமும்; மாணவர்கள் IIT, JEE போன்ற நுழைவு தேர்வுகளை எழுதுகிறார்கள். ஆனால், இது போன்ற நுழைவு தேர்வுகள் எழுதுவது குறித்த விழிப்புணர்வு 0.1 சதவிகித மாணவர்களுக்கு கூட இல்லை. உங்கள் அனைவராலும் அதிகமான மதிப்பெண்கள் எடுக்க முடியும். தற்பொழுது இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களுக்கு அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகள் என்பது உங்கள் வாழ்வில் மிக முக்கியமானது. நீங்கள் என்ன படிப்பு படிக்க போகிறீர்கள், எங்கு படிக்க போகிறீர்கள் என்பது மிக முக்கியம். இந்திய அளவில் ஒன்றிய மாநில அரசுகள் ஆயிரக்கணக்கான கோடிகளை உயர்கல்விக்கு வழங்குகிறார்கள். கடந்த ஆண்டு நம்முடைய மாணவர்களில் உயர்கல்விக்கு சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அவர்களுடைய மதிப்பெண்கள் மட்டும் காரணம் இல்லை. அவர்களுக்கு கிடைத்த விழிப்புணர்வு தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதனால், ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால் அதுக்கு கல்வி முக்கியம் ஆகும். கல்வி, கடும் உழைப்பை போல் எளிதான வாய்ப்பு எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட கல்வியை தெளிவாக நீங்கள் கற்றுக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். பின்னர், உலகளாவிய வாய்ப்புகள், படிப்புகள், கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் குறித்து கல்வியாளர் திரு.நெடுஞ்செழியன் அவர்கள் விரிவாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.
Next Story

