புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்
காட்டு பன்றிகள் பிரச்சனை குறித்து புள்ளி விவரங்களுடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் வைகோ மீது அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்துள்ள மன்மோகன் சிங் மரணம் காங்கிரஸ் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே இழப்பு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அண்ணாமலை நான்காம் தர அரசியல்வாதி போல் செயல்படுவது வேதனைக்குரியது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து காவல்துறை சரியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது - அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ பேட்டி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் மதிமுக பொது செயலாளர் வைகோ ராஜ்ய சபா உறுப்பினர் நிதியின் கீழ் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ 15 லட்சம் மதிப்பில் புதிதாக மேல்நிலை நீர்த்தக்க தொட்டி கட்டப்பட உள்ளது.‌ இதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ கலந்துகொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த துரை வைகோவை கஞ்சநாயக்கன்பட்டி பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.‌ அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு பின் பொதுமக்கள் மத்தியில் பேசிய துரை வைகோ, தமிழகம் முழுவதும் காட்டுப்பன்றிகள் பிரச்சனை விவசாயிகளுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இது மத்திய அரசு சார்ந்த பிரச்சினை. மத்திய அரசு வனத்துறை சட்டத்தை மாற்ற வேண்டும். வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள கூட்டத் தொடரில் தமிழ்நாட்டில் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை பற்றி பேச உள்ளேன். தமிழக அரசு அதற்காக புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த சட்டம் நிறைவேறும். புள்ளி விவரங்களை முழுமையாக சேகரித்து பாராளுமன்றத்தில் காட்டுப்பன்றிகள் குறித்து பேசுவேன். தமிழக வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பன்றிகளை நாட்டு பன்றிகள் என மாற்றி கூறுகிறார்கள். அது குறித்து தமிழக வனத்துறை அமைச்சரை சந்தித்து பேசுவேன். மத்திய அரசு தலையீடு இருந்தால் மட்டுமே காட்டு பன்றிகள் பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியும் என்னால் ஆன முயற்சிகளை நிச்சயம் செய்வேன் என பேசினார். அதனைத் தொடர்ந்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி குறித்து கேட்டதற்கு, பாஜக தலைவர் அண்ணாமலை நன்கு படித்தவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தற்போது லண்டன் வரை சென்று வந்துள்ளார். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர். இப்படிப்பட்ட அண்ணாமலை நான்காம் தர அரசியல்வாதி போல் செயல்படுவது கவலைக்குரியது. பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அண்ணாமலை இப்படி நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயம் என பேசினார். முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு குறித்து கேட்டதற்கு, மன்மோகன் சிங் ஒரு பொருளாதார மேதை என கூறலாம். பொருளாதார மாற்றத்திற்கான கொள்கைகளைக் கொண்டு வந்ததே மன்மோகன் சிங் தான். இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வந்ததே அவருடைய காலத்தில் தான். வைகோவின் கனவுத் திட்டமான சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றி கொடுப்போம் என வாக்குறுதி அளித்தவர் மன்மோகன் சிங்.‌ வைகோ மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவர் மன்மோகன் சிங். அவருடைய மரணம் காங்கிரஸ் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே ஒரு இழப்பு.‌ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக எங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திமுக அரசின் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளதா என கேட்டதற்கு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஐந்து மணி நேரத்திற்குள் குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்கு முன்னால் இதே போன்ற பிரச்சனை பொள்ளாச்சியில் நடந்த போது ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் அதை பெரிதுபடுத்திய பின்னரே நடவடிக்கை எடுத்தார்கள். திமுக ஆட்சியில் தவறு நடக்கவில்லை என கூறவில்லை ஆனால் இந்த சம்பவத்தில் 5 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு காவல்துறை சரியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் யாரும் தப்பி விடக்கூடாது என கூறினார்.
Next Story