போக் சோ வழக்கில் ஒருவர் கைது
Virudhunagar King 24x7 |27 Dec 2024 11:41 AM GMT
போக் சோ வழக்கில் ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகைப்பட கலைஞர் முருகேசனை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். 55 வயதான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். போட்டோகிராபரான இவர் சுப நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க சென்ற போது, அப் பகுதியில் இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றொரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story