நடக்கும் அட்டூழியங்கள், முறைகேடுகளால் பக்தர்கள் முகம் சுழிக்கும் வீடியோ கிடைத்துள்ளது.,இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுந்துள்ளது..*

நடக்கும் அட்டூழியங்கள், முறைகேடுகளால் பக்தர்கள் முகம் சுழிக்கும் வீடியோ கிடைத்துள்ளது.,இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுந்துள்ளது..*
X
நடக்கும் அட்டூழியங்கள், முறைகேடுகளால் பக்தர்கள் முகம் சுழிக்கும் வீடியோ கிடைத்துள்ளது.,இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுந்துள்ளது..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற மலை கோவிலில் நடக்கும் அட்டூழியங்கள், முறைகேடுகளால் பக்தர்கள் முகம் சுழிக்கும் வீடியோ கிடைத்துள்ளது.,இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவில் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும், இந்த இரண்டு கோவில்களும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த தென் திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதங்களில் 5 சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர். வருடத்தில் 52 வாரங்களில் உள்ள சனிக்கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார். இந்த மலைக் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் அலமேலு மங்கை கோவிலில் கோவிந்தராஜ், மஞ்சுளா, வெங்கடேஸ்வரன் பங்காளிகள் முறையில் மாதத்திற்கு 10 நாள் முறைபடி சுழற்சி முறையில் பூஜைகள் செய்யப்பட்டு வரும் பக்தர்களின் நெற்றியில் ராமம் போடப்பட்டு காணிக்கைகள் வாங்கப்படும். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் வெளியூரில் உள்ளதால் அவரிடம் பிரசன்னா தேவி என்பவர் குத்தகை வாங்கி உள்ளார்.இந்நிலையில் சுழற்சி முறையில் வரும்போது இந்த மூன்று நபர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவதாகவும் கைகலப்பு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மஞ்சுளா முறை தாரருக்கும் வெங்கடேஸ்வரன் என்பவரிடம் குத்தகைக்கு எடுத்த பிரசன்னா தேவி என்பவருக்கும் கோவிலில் முறை செய்து காணிக்கை வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது இருவரும் மாறி மாறி பக்தர்கள் முன்பு அருவருக்க தக்கும் வகையில் தகாத வார்த்தைகளில் பேசி சண்டையிட்டுள்ளனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருவரும் நடந்து கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பிரசன்னா தேவி அலமேலு மங்கை கோவிலை பூட்டு போட்டு பூட்டி சாவியை கோவில் ஊழியர்கள் முன்பு எடுத்துச் சென்றார். இந்நிலையில் அலமேலு மங்கை கோவில் பூட்டை காவல்துறை அனுமதியின்றி அவர்களிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் ஆண்டாள் கோவிலில் நிர்வாகம் சொன்னதாக கூறி பூட்டை பக்தர்கள் முன்பு ஆண்டாள் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் உடைத்தனர். இரண்டு பெண்கள் தகாத வார்த்தைகளில் பேசி சண்டையிட்டுக் கொள்வதும் பொறுப்பில்லாமல் அரசு கோவில் ஊழியர்கள் பூட்டை உடைக்கும் வீடியோ கிடைத்துள்ளது. இத்தகைய செயல் பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவில் செயல் அலுவலர், பூட்டை உடைக்கும் அரசு கோவில் ஊழியர்கள், தகாத வார்த்தைகளில் சண்டையிட்டு கோவிலை பூட்டு போட்டு பூட்டிய பெண்கள் இவர்கள் மீது இந்து அறநிலையத்துறையும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்குமா? ஸ்டாலின் அரசுக்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பபி உள்ளனர். மேலும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அலமேலு மங்கை கோவிலுக்கு அரசு நிர்ணயித்து பூஜை செய்யும் பணியாளர்களை பணியமர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story