போலி பாஸ்போர்ட் மூலம் விமான பயணம் – திருச்சியில் இருவர் கைது
Tiruchirappalli King 24x7 |27 Dec 2024 1:01 PM GMT
இமிகிரேஷன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த ஏர்போர்ட் போலீசார் இதுகுறித்து விசாரனை
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து மலேசியா,சிங்கப்பூர், இலங்கை, துபாய், உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியை சேர்ந்த முகம்மது ரியாஸ் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் புலிகார தெருவை சேர்ந்த ராஜசேகரன் ஆகிய இருவரும் போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சி வந்தடைந்தது தெரியவந்தது. இது குறித்து இமிகிரேஷன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த ஏர்போர்ட் போலீசார் இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்
Next Story