ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இரங்கல் கூட்டம்*

X
அரியலூர், டிச.27- ஜெயங்கொண்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இரங்கல் கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்து மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன், மாநில பொது குழு உறுப்பினர் ஆண்டிமடம் ராஜசேகரன், மதிமுக மாவட்ட பொருளாளர் பி.வி.ஆர்.புகழேந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமநாதன், இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். இரங்கல் நிகழ்ச்சியில் விசிக மாவட்ட அமைப்பாளர் சின்னராஜா, ஜெயங்கொண்டம் நகர காங்கிரஸ் தலைவர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் மனோகரன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சக்திவேல், கண்ணன், சரவணன், ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆனந்தராஜ், சாம்வர்கீஸ், சிவமணிகண்டன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
Next Story

