பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு :

பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு :
X
பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு : உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
பரமத்தி வேலூர், டிச. 27: பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விளையும் கரும்பு களைகரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ எடை கொண்ட சிப்பங்களாக (மூட்டை களாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெல்ல ஏல சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. பல்வேறு மாவட் டங்களில் இருந்தும். வெளி மாநில வியாபாரிகளும் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,290 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,450 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,350 வரையிலும் ஏலம் போனது. கரும்பு டன் ஒன்று ரூ.3,800 வரையிலும் விற்பனை யானது. கரும்பு விலை உயர்ந்துள்ளதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். அதேபோல் வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story