ஊதியூர் காவல்துறையினர் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு

ஊதியூர் காவல்துறையினர் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவு நேரத்தில் விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவுப்படி காங்கேயம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மாயவன், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் ஊதியூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் காவல் நிலைய காவலர்கள் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவு நேரங்களில் நடை பயணத்தை தவிர்க்கவும், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை ஓரமாக நடந்து செல்லவும், விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.
Next Story