கடும் பனி மூட்டத்துடன் உறைபனி
Dindigul King 24x7 |27 Dec 2024 3:39 PM GMT
கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் உறைபனி நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக குறைந்தபட்ச வெப்ப நிலையாக 5 டிகிரி செல்சியஸ் மட்டுமே காணப்படுகிறது. மேலும் நகர் முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன. ஓங்கி உயர்ந்த மலை உச்சி கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. ஏரியில் பனிமூட்டத்துக்கு நடுவே படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
Next Story