விழுப்புரம் ரயில் நிலையத்தில் பைக் திருட்டு

X
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஸ்ரீபதி, 34; இவர், கடந்த 15ம் தேதி விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில், ஊழியர்கள் வாகன நிறுத்த பகுதியில் தனது பஜாஜ் சி.டி., 100 பைக்கை நிறுத்திவிட்டு, வெளியூர் சென்றிருந்தார்.மறுநாள் வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

