மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மது போதைக்கு அடிமையானவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.
Karur King 24x7 |27 Dec 2024 3:56 PM GMT
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மது போதைக்கு அடிமையானவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மது போதைக்கு அடிமையானவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர், பாபா கோவில் அருகே வசித்து வந்தவர் ராஜா வயது 39. இவரது மனைவி யமுனா வயது 29. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால், கோபமடைந்த ராஜா மது போதைக்கு அடிமையானார். இந்நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில், விரக்தி அடைந்த ராஜா பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி உடனடியாக தனது கணவனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ராஜா சிகிச்சை பலனின்றி டிசம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் ,அதிர்ச்சி அடைந்த யமுனா இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராஜாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அதே மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story