பில்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.
Villuppuram King 24x7 |27 Dec 2024 3:59 PM GMT
தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேக விழா
விழுப்புரம் அருகே பில்லுார் கலிவுராய ஐயனாரப்பன் கோவிலில்உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் சன்னதியில், மண்டலாபிஷேக விழா காலை 7.30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி நடந்தது.தொடர்ந்து, காலை 10.00மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பன் சாமிக்கு மலர் அலங்காரம் செய்து, 18 படி பூஜைகள் நடந்தது.மகா தீபாராதனையும், பகல் 1.00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இரவு 7.00 மணிக்கு உற்சவம் ஐயப்பசாமி மலர் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடும், இரவு 8.00 மணிக்கு வீதியுலாவும் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story