மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்.
Thiruvarur King 24x7 |27 Dec 2024 4:25 PM GMT
திருத்துறைப்பூண்டியில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி தேமுதிக நகர கழகம் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது விஜயகாந்த் அவர்களின் திருவுரு படத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் நகர செயலாளர் முரளி ஆகியோர் தலைமையில் அதிமுக , தமிழக வெற்றி கழகத்தினர் ,திராவிட கழகத்தினர் , மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட கழக மாவட்ட கழக பொருளாளர் செந்தில்குமார் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story