நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
Chennai King 24x7 |27 Dec 2024 4:55 PM GMT
நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து முதல் பாடல் ‘ஸ்வதீகா’ வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகியுள்ளது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஸ்வதீகா’ வெளியாகி இருக்கிறது. அஜித்- த்ரிஷா கணவன், மனைவியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் இவர்களின் ஜோடியும் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முதல் சிங்கிளின் ஆடியோ மட்டுமே வெளியாகியுள்ளது. வீடியோ லிரிக்கலுடன் இன்று மாலை 5.05 மணிக்கு பாடல் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அறிவு எழுதியிருக்கும் இந்தப் பாடலை அந்தோணி தாசன் பாடியிருக்கிறார்.
Next Story