ஐ.டி.பெண் ஊழியர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
Dindigul King 24x7 |27 Dec 2024 7:42 PM GMT
திண்டுக்கல் வாலிபர் தன்னுடன் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தும் , பணம் பறித்து ஏமாற்றியதாகவும் சென்னை ஐ.டி.பெண் ஊழியர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த ஐ.டி., பெண் ஊழியர் சிவதுர்கா (29) புகார் ஒன்று அளித்தார். 2022ல் சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில் சென்ற போது திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பகவதி என்பவர் மகன் நவநீதகிருஷ்ணன்,என்ற வாலிபர் என்னுடன் நண்பராக பழகினார். அதிலிருந்து இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்வதாக கூறினார். நானும் அதை நம்பி அவருடன் நெருக்கமாக பழகினேன். அவர் கேட்கும் போதெல்லாம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தேன். இதுவரை ரூ.9 லட்சம் கொடுத்துள்ளேன். பலமுறை அவர் அழைக்கும் போதெல்லாம் மதுரை,திண்டுக்கல்லில் தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்கினேன்.திருமணம் செய்யாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். ஒவ்வொரு முறை திருமணம் பேச்சுக்குறித்து எடுக்கும்போதெல்லாம் தங்கை திருமணம் முடியட்டும் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார். இது குறித்து அவரது பெற்றோரிடம் பேசியது போது அவர்களும் என்னை மிரட்ட தொடங்கினர். மேலும் அவரை பற்றி ஆராய்ந்த போது என்னை போல பல பெண்களை இதுபோல் நவநீதகிருஷ்ணன், ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். என்னை ஏமாற்றிய நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் நான் கொடுத்த பணமும்.பாதுகாப்பும் வேண்டும் என தெரிவித்தார்.
Next Story