ஆலையில் வாலிபர் கொலை நேபாள நண்பர்கள் கைது

ஆலையில் வாலிபர் கொலை நேபாள நண்பர்கள் கைது
குன்றத்தூரில் வாலிபர் கொலை செய்த நேபாள நாட்டை சேர்ந்த நண்பர்கள் கைது
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சய், 35. குன்றத்துார் அருகே பழந்தண்டலத்தில் தங்கி, அதே பகுதி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருடன், நேபாளம் நாட்டை சேர்ந்த, நண்பர்களான ஜித்தையன், 22, ராம், 20, ஆகியோரும் தங்கி, தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். பணியிடத்தில், மஞ்சய் மற்றும் ஜித்தையன், ராம் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஜித்தையன் கத்தியால் குத்தியதில், மஞ்சய் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்துார் போலீசார், மஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஜித்தையன், ராம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story