தூத்துக்குடியில் பெண்ணை கேலி செய்தவர் கைது!
Thoothukudi King 24x7 |28 Dec 2024 4:13 AM GMT
தூத்துக்குடியில் பூங்காவில் பெண்ணை கேலி செய்து அத்துமீறியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் பூங்காவில் பெண்ணை கேலி செய்து அத்துமீறியவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகா் பூங்காவில் கடந்த 24ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த ஒரு இளைஞா் அந்த பெண்ணை கிண்டல் செய்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அதே பகுதியைச் சோ்ந்த லெனின் காந்தி மகன் தென்மலை தென்குமரன்(24) என்பவரை கைது செய்தனர். அவா் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் தருவைக்குளம், சிப்காட், புதுக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் உள்ளதும், சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story