ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
அண்ணா பிறந்தநாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி 6 மணிக்கு ராணிப்பேட்டையில் நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் தனித்தனியே போட்டி நடத்தப்படவுள்ளது. இப்போட்டி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி பாரதிநகர் வழியாக வேதவள்ளி வித்யாலயா பள்ளி சென்று திரும்பி வானாபாடி ரோடு வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை அடையும்.போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும்.
Next Story