முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மறைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனைத்து கட்சியினர் கருப்பு பட்டை அணிந்து மௌன ஊர்வலத்தில் ஈடுபட்டனர் ...*

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மறைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனைத்து கட்சியினர் கருப்பு பட்டை அணிந்து மௌன ஊர்வலத்தில் ஈடுபட்டனர்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மறைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனைத்து கட்சியினர் கருப்பு பட்டை அணிந்து மௌன ஊர்வலத்தில் ஈடுபட்டனர் ... கடந்த 2004 முதல் 2013 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங் அவர்கள் பொருளாதார நிபுணராகவும் இருந்து காங்கிரஸ் கட்சியை வழிநடத்தியவர். நேற்று இரவு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனற்றி இரவு 10 மணி அளவில் உயிரிழந்தார் இவரின் மறைவை இந்தியா முழுவதும் கல்வியை அனுசரித்து வரும் நிலையில் விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருதுநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகரத் தலைவர் நாகேந்திரன் விருதுநகர் ஒருங்கிணைப்பாளர் வெயிலு முத்து தலைமையில் , நடைபெற்ற மௌன ஊர்வலத்தில் கட்சி பாகுபாடு பாராமல் , பாஜக, அதிமுக, திமுக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்புலிகள்,உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு கருப்பு பட்டை அணிந்து மௌன அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் இந்த மௌன அஞ்சலி ஊர்வலமானது விருதுநகரில் உள்ள எம்ஜிஆர் சிலையில் ஆரம்பித்து நகராட்சி அலுவலகம் ,தெப்பம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில் வழியாக தேசபந்து மைதானத்தில் முடிவடைந்தது பின்னர் தேசபந்து மைதானத்தில் வைத்திருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் திரு உருவப் படத்திற்கு அனைத்து கட்சிகள் சார்பில் ஏரளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
Next Story