மிதமான மழை
Erode King 24x7 |28 Dec 2024 6:32 AM GMT
ஈரோடு மாவட்டத்தில் மிதமான மழை பவானியில் 28 மி.மீ பதிவு
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று காலையில் சென்னை மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக ஈரோட்டிலும் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசான வெயில் நிலவியது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்திருந்தது. இன்று காலை 8 மணி நிலவரத்தின்படி மாவட்டத்தில் மொத்தம் 86.70 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இதில் அதிக அளவாக பவானியில் மட்டும் 28.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின் படி பெய்திருந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: பவானி - 28.20, கவுந்தப்பாடி - 9.40, அம்மாபேட்டை - 10.20, வறட்டுப்பள்ளம் அணை - .03, கோபி - 13.20, எலந்தக்குட்டை மேடு - 3.80, கொடிவேரி அணை - 3, குண்டேரி பள்ளம் அணை - 11.60, சத்தியமங்கலம் - 3, பவானிசாகர் அணை - 4. தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 31ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Next Story