கோவை: புது உருவில் புறப்பட்ட ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் !

21ஆண்டுகால பயணத்தை கடந்து, கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று முதல் புது உருவில் பயணிகளை கவர்ந்துள்ளது.
21 ஆண்டுகால பயணத்தை கடந்து, கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று முதல் புது உருவில் பயணிகளை கவர்ந்துள்ளது.தமிழகத்தில் இயக்கப்படும் ஒரே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2003 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.பயணிகளின் வசதிக்காக, இந்த ரயில் இனி LHB பெட்டிகளுடன் இயக்கப்படும். இதன் மூலம் பயணிகள் இன்னும் விசாலமான இருக்கைகள், சிறந்த வசதிகள் மற்றும் அதிக வேக பயணத்தை அனுபவிக்கலாம்.புதிய LHB பெட்டிகளால், ரயில் அதிக வேகத்தில் இயக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனால் பயண நேரம் குறையும்.இந்த புதிய மாற்றத்தை கொண்டாடும் விதமாக, கோவை ரயில் நிலையத்தில் தொடர்ந்து பயணிக்கும் பயணிகள் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கும்பகோணம், நாகூர் மற்றும் வெள்ளாங்கண்ணி கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்த ரயில் பெரும் வரமாக அமைந்துள்ளது. மேலும், டெல்டா மாவட்ட மக்கள் மேற்கு தமிழக நகரங்களுக்கு செல்ல இது வசதியாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story