மருத்துவக் கல்லூரி மாணவி மர்ம மரணம் உறவினர்கள் போராட்டம்!

போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சியை சேர்ந்த ரமேஷ் மகள் சௌமியா (20) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் பயின்று வருகிறார் இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மாலை வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார் எங்க தேடியும் கிடைக்கவில்லை இது குறித்து வடகாடு காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர் இந்நிலையில் 27ஆம் தேதி காலை அவரின் வீட்டில் இருந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசவே அதன் பின் அவரை உடலை மீட்டனர் அந்த உடலில் வெட்டு காயங்கள் இருந்ததாக உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர் அதன் பிறகு சவுமியாவின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக மரணம் எனக்கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இறந்த சௌமியாவின் உறவினர்கள் புதுக்கோட்டை தஞ்சை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது
Next Story