கோவை: லெப்ட் கொடுத்தவரிடம் செல்போன் பணம் பறிப்பு !

கோவை: லெப்ட் கொடுத்தவரிடம் செல்போன் பணம் பறிப்பு !
குனியமுத்தூரை சேர்ந்த வாலிபர் தன்னுடைய வாகனத்தில் ஒருவருக்கு லிப்ட் கொடுத்த போது அவரிடம் பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரத்தை சேர்ந்த அருண் பிரசாத் (வயது 35) என்பவர் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, ஒருவர் வழிமறித்து லிஃப்ட் கேட்டார். அவரை அருண் பிரசாத் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார். பின்னர், அவர் ஒரு இடத்தில் இறக்கி விடுமாறு கூறினார். அப்போது அங்கிருந்த 2 பேருடன் சேர்ந்து கொண்டு திடீரென்று அருண் பிரசாத்தை மிரட்டி செல்போன் மற்றும் ரூ.1000 பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில்,குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், செல்போன் பறித்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story