ராமநாதபுரம் தேமுதிக கட்சி நிர்வாகிகள் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கினர்

ராமநாதபுரம் தேமுதிக கட்சி நிர்வாகிகள் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கினர்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய தேமுதிகவினர் கட்சி நிர்வாகிகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் காலமானர். அவரது முதலாம் ஆண்டு நினைவுநாளில் கேப்டன் கடவுள் தேமுதிக இணையதளம் சார்பாக முதுகுளத்தூர் அருகே விளாங்குளத்தூர் கிராமத்தில் உள்ள பசுங்குடில் முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாயல்குடி பேரூராட்சி தேமுதிக முன்னாள் கவுன்சிலர் முகமது ரபீக், இணைத்தளம் பொருப்பாளர் பாலா, சாயல்குடி நகர நிர்வாகி ராம்குமார், ராமநாதபுரம் ஒன்றிய பொருப்பாளர் முகவை பழனிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து கேப்டன் அவர்களின் தேடிச்சென்று உதவும் திட்டமாக சாயல்குடி, சண்முககுமராபுரம், அண்ணாநகர், உறைக்கிணறு பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Next Story