கால்நடைகளின் உற்பத்தி திறனை பெருக்க

75 பயனாளிகளுக் கு இணை தீவனக் கட்டி
நாகை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் சார்பில், கிழக்கு காவிரி டெல்டா வேளாண் உப பொருட்களை செறிவூட்டப்பட்ட தீவனமாக்கி கால்நடைகளின் உற்பத்தி திறனை பெருக்குதல் திட்டத்தில் கால்நடை கால்நடைகளுக்கான இணை தீவன கட்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், நாகை கால்நடை பராமரிப்புத்துறைமண்டல இணை இயக்குநர் ராம்நாத் கலந்து கொண்டு, நாகையில் தீவன உற்பத்தி நிலவரம், வேளாண் உப பொருள்கள் விரையம் ஆவதையும், அதனை சிறப்பான முறையில் பயன்படுத்துவதில் உள்ள அனுகூலங்களையும் விவரித்தார். சென்னை தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் தின் விரிவாக்கக் கல்வி இயக்குநர் அப்பாராவ் பேசியதாவது 'காவிரி டெல்டா பகுதிகளில் கிடைக்கும் முக்கிய வேளாண் உபபொருளான வைக்கோலை செறிவூட்டப்பட்ட வைக்கோலாக மாற்றி, பால் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில் நுட்பம் மற்றும் இத்திட்டத்தில் பண்ணையாளர்களுக்கு வழங் கப்படும் கால்நடைகளுக்கான இணை தீவனக்கட்டி தொழில் நுட்பத்தையும், பண்ணையாளர் கள் பின்பற்றி பால் உற்பத்தியை பெருக்கிட அறிவுறுத்தினார். தொடர்ந்து விழாவில், பங்கேற்ற 75 பயனாளிகளுக்கு இணை தீவனக் கட்டிகள் வழங்கப்பட்டன. இதையொட்டி அமைக்கப்பட் டிருந்த கால்நடை பண்ணை மேலாண்மை கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள், விவசாயிகள் பார்வையிட்டனர். விழாவில், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோபால கண்ணண், நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர்கள் சுரேஷ், வினோதினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story