மீனாட்சி அம்மன் கோவிலில் குவியும் பக்தர்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த சில நாட்களாக வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளார்கள். இன்று (டிச.28) கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசிக்கும் நிலை உள்ளது. நான்கு சித்திரை வீதிகளில் வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் கூட்டம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளதால் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story