பரமத்தி அருகே வடமாநிலத்தவரிடம் பணம் செல்போன் பறித்துச் சென்ற இளைஞர் கைது.
Karur King 24x7 |28 Dec 2024 9:08 AM GMT
பரமத்தி அருகே வடமாநிலத்தவரிடம் பணம் செல்போன் பறித்துச் சென்ற இளைஞர் கைது.
பரமத்தி அருகே வடமாநிலத்தவரிடம் பணம் செல்போன் பறித்துச் சென்ற இளைஞர் கைது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி கரூரை அடுத்த பரமத்தி வீரா மெஸ் அருகிலும், பவித்திரம் வானவெளி பிரிவு பகுதியில் வந்த வடமாநிலத்தவரிடம், டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், அமைக்கப்பட்ட தனிப்படையினர், இது தொடர்பாக அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில்,கரூர் வெங்கமேடு ஜோசியக்கார தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திக் வயது 24 என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, மேற்கண்ட வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்து, அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், குற்ற செயலுக்கு பயன்படுத்திய டூ வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். கார்த்திக் மீது ஈரோடு மற்றும் வெங்கமேடு காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story