சீமானை கைது செய்ய வேண்டும் : எஸ்பி அலுவலகத்தில் மனு!

சீமானை கைது செய்ய வேண்டும் : எஸ்பி அலுவலகத்தில் மனு!
அனைத்து இந்து கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் சீமான் மீது வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அனைத்து இந்து கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:முருகன் கோவில் உண்டியலில் செல்போனை தவறுதலாக பக்தர் ஒருவர் போட்ட சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கேலியாகவும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையிலும் விமர்சித்துள்ளார். சாட்டை துரைமுருகனும் நையாண்டி செய்துள்ளார். இது இந்து மக்களை கோபப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே சீமானை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story