நிலங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு
Vellore King 24x7 |28 Dec 2024 9:49 AM GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, வருவாய் கோட்டாட்சியர்கள் சுபலட்சுமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் தெரிவித்தனர். அதாவது , நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிடிக்கப்படும் பாம்புகளை வனப்பகுதியில் விடுகின்றனர். இதனால் அவை அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு வருகிறது. இதன் காரணமாக பாம்பு கடியால் பலர் உயிரிழக்கின்றனர். பாம்புகளை அடர்ந்த வனப்பகுதியில் விடவும், பாம்புக்கடியால் இறந்தவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ செலவுக்கு வனத்துறையினர் பொறுப்பேற்க வேண்டும் என குற்றச்சாட்டை முன்வைத்தனர் .
Next Story