தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

X
Pallipalayam King 24x7 |28 Dec 2024 6:30 PM ISTவிஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
தேமுதிக நிறுவன தலைவர், விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது . இந்த நிகழ்விற்கு பள்ளிபாளையம் நகர தேமுதிக செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். இதில் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து அக்னி மாரியம்மன் கோவில் அருகே 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. மேலும் பள்ளிபாளையம் டிவிஎஸ் மேடு நூறு தறி குடோன் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த நிகழ்வில் நிர்வாகிகள் கழகத் துணைச் செயலாளர் சாந்தி, நாகராஜ் ,கோபி ,மாவட்ட பிரதிநிதி சரவணன் , நகர மகளிர் அணி செயலாளர் தங்கம்மா, ஜமுனா ,மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சுரேஷ், தொழிற்சங்க தலைவர், துணை தலைவர் சம்பத் மற்றும் வார்டு செயலாளர்கள் முருகன், ராமச்சந்திரன், மகாலிங்கம், நாகராஜ் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்
Next Story
