ஆரணியில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளருக்கு நிவாரணம்

X
ஆரணி நகரம், அருந்ததிபாளையம் பகுதியில் கூலித்தொழிலாளியின் வீடு பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததால் ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி நிவாரணம் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், ஆற்று பாலம் அருகே உள்ள அருந்ததிபாளையம் பகுதியில் பாண்டியன் என்பவர் கூலித்தொழிலாளி ஆவார். இவரும் இவரது மனைவி மாலதி ஆகியோர் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் பாண்டியன் என்பவரின் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர் நிவாரணம் வழங்க ஆரணி கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட்டார். இதன் காரணமாக ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி மற்றும் வட்டாட்சியர் கௌரி நேரில் சென்று குடிசை வீட்டை பார்வையிட்டு தமிழக அரசு சார்பில் நிவாரணங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் அரிசி , மளிகை சாமான், காய்கறி, நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினர். இந்நிகழ்வில் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், திமுக மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் எம்.சுந்தர், துரைமாமது, எஸ்.மோகன், வட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story

