திருந்திய நெல் சாகுபடி பற்றிய பயிற்சி முகாம்

திருந்திய நெல் சாகுபடி பற்றிய பயிற்சி முகாம்
X
குமாரபாளையம் அருகே வேளாண்மைத் துறையின் சார்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின்  கீழ், திருந்திய நெல் சாகுபடி பற்றிய பயிற்சி முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில்   வேளாண்மைத் துறையின் சார்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின்  கீழ், திருந்திய நெல் சாகுபடி பற்றிய பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி தலைமை வகித்தார். இப்பயிற்சியில் திருந்திய நெல் சாகுபடியின் தொழில்நுட்பங்களான ஒற்றை நாற்று நடவு முறை, ஏக்கருக்கு 2 கிலோ விதை என குறைந்த விதையளவு, நடவு வயலில் தண்ணீர் எப்பொழுதும் தேக்கி வைத்திருக்க வேண்டியதில்லை எனவும், பாய்ச்சலும் காய்ச்சலுமாக தண்ணீர் கட்டுவதே போதுமானது எனவும், களையை கட்டுபடுத்த கோனோவீடர் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் வேளாண்மை துணை இயக்குநர் முருகேசன் பேசினார்.  வேளாண்மை அலுவலர் ரஞ்சித்ராஜ் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்  மாயாஜோதி பங்கேற்று,  வேளாண்மை துறையில் உள்ள அனைத்து திட்டங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் மானியங்கள் பற்றியும் விளக்கி கூறினார்கள். மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நிஷா மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் கிருபா மற்றும்  பிரியங்கா  செய்திருந்தனர்.
Next Story