கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலி.

கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலி.
மதுரை அவனியாபுரம் அருகே கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலியானார்.
மதுரை அவனியாபுரம் செம்பூரணி பகுதியை சேர்ந்த பூமி நாதன் என்பவரங இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (15,)அருப்புக்கேடடை அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 23ம் தேதி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக அவனியாபுரத்திலுள்ள வீட்டிற்கு வந்த அஸ்வின் நண்பர்களுடன் இன்று (டிச.28) வள்ளானந்தபுரத்தில் உள்ள ஊரணியில் குளிக்கும் போது ஆழத்தில் சிக்கனார் . இதனை பார்த்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story