மின்சாரம் பாய்ந்தவரை காப்பாற்றிய எலக்ட்ரீசியன் உயிரிழப்பு.

மின்சாரம் பாய்ந்தவரை காப்பாற்றிய எலக்ட்ரீசியன் உயிரிழப்பு.
X
ஜேடர்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்தவரை காப்பாற்றிய எலக்ட்ரீசியன் உயிரிழப்பு.
பரமத்தி வேலூர், டிச. 28: பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே குறும்பலமகாதேவி, எலந்தகுட்டை பகுதியைச் சேர்ந்த வேலப்பகவுண்டர் மகன் பழனிசாமி (42). எலக்ட்ரீசியனான இவர் ஆண்டிபாளையம் பகுதியில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் மோட்டார் பொருத்துவதற்காக நல்லாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சங்கர், ஜமீன் இளம்பிள்ளையைச் சேர்ந்த கவின் ஆகியோரை அழைத்துச் சென்றார். மின் மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது கவின் மீது மின்சாரம் பாய்ந்தது. அதை பார்த்த பழனிசாமி, கவினை தள்ளிவிட்டு மின்வயரை கையில் பிடித்து இழுத்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட 4 பழனிசாமி, வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பழனிசாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். குறித்து ஜேடர்பாளையம் போலீஸா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story