கொச்சின் சேலம் தேசிய நெடுஞ் சாலையில் ப்ரொபைலைன் கேஸ் நிரம்பிய டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
கொச்சினில் இருந்து குஜராத் நோக்கி ப்ரோப்லைன் கேஸ் நிறப்பிய லாரியை முருகன் (43) ஓட்டி வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து நியூ திருப்பூர் அருகே சர்வீஸ் சாலையில் லாரி ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் பகுதியில் இன்று அதிகாலை சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் புறப்பட்டு ஆறு வழிச்சாலையில் செல்வதற்காக சர்வீஸ் சாலையில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால் பாதையில் இறங்கி நிலை தடுமாறி ஆறுவழிச்சாலையோர தடுப்பின் மீது விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஸ்ட வசமாக ஓட்டுநர் முருகன் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் ப்ரொபலைன் கேஸ் அடங்கிய டேங்கர் சேதம் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அவிநாசி தீயணைப்பு மீட்பு பணி குழு சம்பவ இடத்திற்கு வந்து ராட்சத கிரேன் மூலம் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் போராடி அசம்பாவிதம் இன்றி லாரியை மீட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் முழு கொள்ளளவில் ப்ரொபலைன் காஸ் அடங்கிய டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story



