திருவண்ணாமலை : ஆட்சிமொழி சட்ட விழிப்புணா்வுப் பேரணி.
Tiruvannamalai King 24x7 |28 Dec 2024 4:47 PM GMT
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழி சட்ட விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு, தமிழ் வளா்ச்சித்துறையின் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநரும், திருவண்ணாமலை மாவட்ட உதவி இயக்குநருமான (கூடுதல் பொறுப்பு) சுந்தா் தலைமை வகித்தாா். மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் பா.இந்திரராசன் முன்னிலை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து, தொடங்கி வைத்து பேசினாா். திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் ‘தமிழா தமிழா’ என்ற கவிதை தொகுப்பை பாடி கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினியிடம் அளித்தாா். இதில், பேராசிரியா் பிரேம்குமாா் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் வைக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
Next Story