விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
திரளான பக்தர்கள் தரிசனம்
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக பெருவிழா, சிவராத்திரி மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு நூறு கால் மண்டபத்தில் உள்ள பிரம்மாண்ட நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தீஸ்வரர் காட்சி தந்தருளினார்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக சனி பிரதோஷத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், யாக வேள்வி பூஜையும் நடந்தது. இதேபோல முதனை முதுகுன்றீஸ்வரர், பாலக் கொல்லை அழகேஸ்வரர், தேவஸ்தான கோபுராபுரம் ஆதிசக்தி ஈஸ்வரர், புலியூர் வீரசேகரர், தர்மநல்லூர் தர்மபுரீஸ்வரர், ராஜேந்திரப்பட்டினம் நீலகண்டேஸ்வரர் மற்றும் காவனூர், ஆலடி, சத்தியவாடி, கார்மாங்குடி, வடக்கு வெள்ளூர், மு.பரூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைந்துள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.
Next Story