சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட எஸ்பி ரோடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் சனி பிரதோஷ தினத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடு நடைபெற்றது
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட எஸ்வி. ரோடு பகுதியில் பூபதி திருமண மண்டபம் அருகே அமைந்துள்ள அருள்மிகு சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் சனி பிரதோஷ தினத்தை முன்னிட்டு நேற்று மாலை சித்த லிங்கேஸ்வரருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால்,தயிர், இளநீர், பன்னீர் தேன் பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு, சித்தலிங்கேஸ்வரர் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் தீபங்களை ஏற்றி வழிபட்டனர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் டிஎன்.லோகநாதன். ஏற்பாடுகளை செய்து வந்தனர் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story