ஆலங்குளம் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள்

ஆலங்குளம் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள்
தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கினர்
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை யொட்டி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் பேரூராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா சிவகாமிபுரத்தில் நேற்று (டிசம்பர் 28) நடைபெற்றது. பேரூராட்சி கவுன்சிலரும், மாவட்ட திமுக பிரதிநிதியுமான பொன்செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கச்சாமி, ஒன்றிய பொருளாளர் அன்பரசு, பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், திமுக நிர்வாகிகள் ராஜதுரை, சந்திரமோகன், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story