சிவகிரி அருகே குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு
Sankarankoil King 24x7 |29 Dec 2024 6:44 AM GMT
குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காணாமல் போனவா் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். தேவிபட்டணம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் மாரியப்பன் (48). இவர் ஆட்டுக்கு புல் அறுக்கச் சென்ற இவா் வீடு திரும்பவில்லை. இதுதொடா்பாக சிவகிரி காவல் நிலையத்தில் அவரது உறவினா் மகுடேஸ்வரன் புகாா் அளித்தாா். இந்நிலையில், தேவிபட்டணம் சண்முகநதி குளக் கால்வாயில் மாரியப்பனின் சடலம் மிதப்பது சனிக்கிழமை தெரியவந்தது. சிவகிரி காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி, உதவி ஆய்வாளா் வரதராஜன் ஆகியோா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story