கோவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புகழஞ்சலி !
Coimbatore King 24x7 |29 Dec 2024 7:16 AM GMT
கோவை மாவட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இறப்பிற்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இறப்பிற்கு,நேற்று மாலை கோவை காமராஜ் பவணியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட காங்கிரஸ் ஆர் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு வரை சென்று, திமுக உள்ளிட்ட கோவை மாவட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து, புகழஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தாசில்தார் அலுவலகம் முன்பு வைத்திருந்த மண்மோகன் சிங் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்பொழுது பொருளாதார மேதை மன்மோகன் சிங் அவர்களின் புகழ் ஓங்குக எனக் கூறி அனைவரும் புகழஞ்சலி செலுத்தினர். இதில் திமுக விடுதலை சிறுத்தைகள் வெளியிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story