பேரூர்: கோவில் குடமுழுக்கு-ஆதீனம் தலைமையில் ஆலோசனை ,!
Coimbatore King 24x7 |29 Dec 2024 8:00 AM GMT
கோவை பட்டீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், பேரூர் ஆதீனம் மருதாசில அடிகளார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை பட்டீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், பேரூர் ஆதீனம் மருதாசில அடிகளார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.தமிழக அரசின் உத்தரவின்படி, வரும் பிப்ரவரி 10 அன்று கோவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் பேசிய அடிகளார், கோவில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், பக்தர்கள் தன்னார்வலர்களாக பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கோவில் உதவி ஆணையர், சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
Next Story