கன்னியாகுமரி : கடற்கரை சாலையில் தற்காலிக கடைகள் அகற்றம்
Nagercoil King 24x7 |29 Dec 2024 8:16 AM GMT
குமரி
கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 25 வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நாளை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக நாளை தமிழக முதல்வர் கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சபரிமலை சீசன் காலம் மற்றும் விடுமுறை காலம் என்பதால் கடற்கரை சாலையில் தற்காலிகமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறி பேரூராட்சி அதிகாரிகள் இன்று (29-ம் தேதி) கடற்கரை சாலையில் உள்ள ஏராளமான கடைகளை அப்புறப்படுத்தினார்கள்.
Next Story