தார் சாலை வசதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Dharmapuri King 24x7 |29 Dec 2024 8:29 AM GMT
அரூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரூர் வட்டத்துக்கு உட்பட்டது கருங்கல்பாடி கிராமம், இந்தகருங்கல்பாடி முதல் திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறை வரை சுமார் 1.800 கிலோ மீட்டர் வனப்பகுதியில் அமைந்துள்ள மண்சாலையை தார் சாலையாக மாற்றி தரவேண்டி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை விடுத்து தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து, இன்று டிசம்பர் 29, உடல்நிலை பாதித்த மூதாட்டியை கட்டிலில் வைத்து கையில் கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து உடல்நிலை பாதித்த மூதாட்டியை கட்டிலில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலை மாற வேண்டும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story